பக்கம்:காதலா கடமையா.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் - 11



(“ஏழையேன் அவட்கும் தாழ்குழல் எனக்குமாய்
வாழுகின்றோம்”)


இடம்
கொன்றை நாட்டில்
ஒரு தனியிடம்
உறுப்பினர்
மகிணன்,
அமைச்சன்


ங்கவேல் போனபின் தனிமையில் மகிணன்
மங்கையை நினைத்து வாடலானான்.

அவன் கண்ணெதிரில்,
வெயில் தழுவியதோர் வெறுவெளிதனில், அவ்
வயில்விழிக் கிள்ளை அழகு காட்டினாள்.
மங்கா உடலெனும் மாற்றுயர் பொன்னையும்,
பொங்கும் சிரிப்புப் புத்தொளி முகத்தையும்
வகைபெறு கழுத்து வலம்புரிச் சங்கையும்
விழிநீ லத்தையும் மொழிஅமு தத்தையும்
இதழ்ப்பவ ழத்தையும் இந்தா என்றே
எதிரில் வைத்தே எழிலுறு கிள்ளைதன்
அன்பெனும் நீர்வார்த் தளித்து நின்றாள்
இன்பத்தை மகிணன் இருகையால் தாவினான்.
இருவிழி ஏமாந்து போக, இஃதவள்

39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/40&oldid=1484444" இலிருந்து மீள்விக்கப்பட்டது