பக்கம்:காதலா கடமையா.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உருவெளித் தோற்றமென் றுணரலானான்
ஏழையேன் அவட்கும் தாழ்குழல் எனக்குமாய்
வாழுகின்றோம் மணந்தின் பம்பெற
இன்றுநான் எண்ணினும் இயலும். ஆயினும்
கொன்றை நாட்டைமுன் னின்று நடாத்தத்
தலைமை ஏற்கச் செய்தனர்
நாடு தந்த நல்லதோர் புகழால்
தேடரும் கிள்ளையைத் தேடிக் கொண்டான்
என்று வையம் என்னை இகழும்
என்றே எண்ணி இருக்கையில்,
அமைச்சன் வந்தான்.

“விடுதலை அறிக்கை வெளிவந்ததுவோ”
என்று மகிணன் இயம்ப, அமைச்சன்
“கொன்றை, கிள்ளையைக் கொடுப்பின் அன்றே
மாழை, விடுதலை வழங்குமாம்” என்றான்.
கேட்டவன் யார்என்று கேட்டான் மகிணன்
வாட்படை கொண்ட மன்னன்என் றானவன்.

“பறித்தார் பெறுவது பாவை உளமலர்:
மறுத்தாள் என்னின் மன்னன் செய்வதென்?
பெண்தந்து விடுதலை பெறச்சொல் வதுவோ?
கண்ணிருக்க மேன்மைக் கருத்திழந் தானோ”
என்று மகிணன் இசைத்தான். அமைச்சன்,

“ஒன்றுகேள் மகிணனே உன்னால் ஒரு தடை
நேராது நடத்தல் நின்கடன்” என்றான்.

மகிணன் புகல்வான்:
“சூல்கா ணினும் கதிர்பால் காணாத

40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/41&oldid=1484449" இலிருந்து மீள்விக்கப்பட்டது