பக்கம்:காதலா கடமையா.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வந்து மரவட்டை மண்ணில் உலர்த்தும்
நகுமகன் அன்றோ மகிணன்? கருதுவாய்,
தகுமகள் அன்றோ தையல்நீ" என்னலும்,

கண்ணீர் அருவி வெண்துகில் நனைத்து
மண்ணிற் சாய்ந்து வழியக், கைம்மலர்
முகமலர்க் கண்ணைமூட, விம்மி
அகமலர் மெய்ம்மலர் அதிரக் கிள்ளை
ஓய்எனக் கூறினும் ஓயா தழுதாள்

சேயிழைக் குரிய செம்மல் மகிணனை
இகழ்ந்தது பற்றி அகம்கொதித் தாள்என
வாட்பொறை எண்ணினான். வஞ்சி, "ஐயகோ!
பொருளிலார் இழிந்தோர் என்று புகலும்
இருளுளம் படைத்தோர் இருக்கின்றாரே
அயர்ந்தார் அயர அகப்பட்டது சுருட்டப்
பயின்றார் கையிற் பட்ட பழிப்பொருள்,
இழிஞன்என் றொருவனை இயம்புமாயின்
அழிபொருள் இன்றே அழிதல் வெண்டும்.
அழிபடத் தக்க வழிதான் என்னெனில்
உண்ண உடுக்க உறைய நுகர ஆம்
மண்பொருள் சரிநிகர் மக்கட் பொதுவெனச்
சட்டம் செய்வதாம்.
அண்ணா நீவிர் என் அன்பனைப் பழித்தீர்
எண்ணிலாப் பெரும்பொருள் எனக்கும் உண்டு
மாயாது நான் உயிர் வைத்திருப்பதற்கோ
அகப்பொருள் காரணம் அல்ல அல்ல.
தக்க அம்மேலோன் மக்கள் நலத்திற்குத்
தொண்டு செய்து தொலைக்கும் நாட்களில்
ஒருநாள் ஒருபொழு தொருநொடி, என்னெதிர்

45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/46&oldid=1484563" இலிருந்து மீள்விக்கப்பட்டது