பக்கம்:காதலா கடமையா.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் - 13



("அங்கே அரசன் அவள் நினைவாக
இருந்திடு கின்றான் எரிந்திடும் உளத்தொடு")


இடம்
கொன்றை நாட்டின்
அரண்மனை
உறுப்பினர்
அமைச்சன்,
தங்கவேல்.


“செங்கதிர் இல்லையேல் திங்கட்குச் சீர்இலை
என்பது போல, எங்கை,
மகிணன் இல்லையேல் வாழேன் என்றாள்”
மகிணனோ,

“தன்னைக் கிள்ளைக்குத் தந்ததாய்ச்” சாற்றினான்
என்றான் அமைச்சன்.

“எங்ஙனம் விடுதலை” என்றான் தங்கவேல்.

“அங்கே அரசன் அவள் நினைவாக
இருந்திடு கின்றான் எரிந்திடும் உளத்தொடு!
மருந்தொன்றும் அறியேன் மக்கள் நோய்க்கு!
மகிணனும் கிள்ளையும் மற்றவர் தம்மினும்
மிகுந்த விருப்பினர் விடுதலை பெறுவதில்.
அவர்பால் என்னநாம் அறைதல் கூடும்?

47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/48&oldid=1484554" இலிருந்து மீள்விக்கப்பட்டது