பக்கம்:காதலா கடமையா.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மங்காது மின்னும் மணிக் கொடிமதிலும்
இன்னும் முன்போல் இருத்தல் அறியிரோ?
மன்னர் பெருங்குடி வாழ்வதும் அறியிரோ?”
என்று கூறினான்.

வாட்பொறை மாமன் மகனாம் 'தாரோன்'
கேட்பாய் ஒள்ளியோய் கிளத்து கின்றேன்:
“கோழி நாட்டுக் கொற்றவன் உன்றன்
மாழை நாட்டை வளைப்பதற்குப்
பெரும்படை திரட்டினான். விரைவிற் கிளம்புவான்
தருவதோர் விடுதலை தந்து முடித்தால்
உன்றன் நாட்டுக் குதவியாய்க் கொன்றை
நன்று முயற்சி நடத்து மன்றோ?
இச் செயல் விரைவில் இயற்றீராயின்
எத்தீங்கு நேருமோ எண்ணுக இதனை”
என்றான். ஒள்ளியோன் “எம்இறை ஆணையை
இன்றுநீவீர் இகழாது செல்வீர்.”
என்று சினத்தொடும் இயம்பினான். மக்கள்
சென்றனர். தாரோன் சிரித்துச் சென்றான்.
ஒள்ளியோன் அரசனிடத்தில்
விள்ள லானான் நடந்ததை விரித்தே.

56

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/57&oldid=1484493" இலிருந்து மீள்விக்கப்பட்டது