பக்கம்:காதலா கடமையா.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் - 17



(“தன்உரு மாற்றினான் மன்னன்.
அன்னவன் மனைவி ஆனாள் ஒள்ளியோனே.”)


இடம்
கொன்றை நாட்டின்
ஒருபுறம்.
உறுப்பினர்
மாழைப் பேரரசு,
ஒள்ளியோன்

(மாற்றுருவினர்.)


“நன்று கூறினை நாட்டாரிடத்து நீ
கொன்றை மக்கள்மேல் குற்றங் காட்டிச்
சிலரைப் பிடித்துச் சிறையில் அடைத்தும்
பலரை இன்னற் படுத்தியும் பார்க்க
எண்ணி இருந்தேன் என் எண்ணம் போல்
நண்ணிய மக்கள்பால் நன்று கூறினை.
நம்உரு மாற்றி நாட்டைச் சுற்றுவோம்
இம்மக்கள்பால் எக்குறை காணினும்
நாட்டைமுன் னின்று நடுத்துவோர் மேல் அதைப்
போட்டுச் சிறையில் புகுத்த வேண்டும்
என்னஉன் எண்ணம்” என்றான் மாழையான்!
“அன்னதே என்றான்” வன்புடன் ஒள்ளியோன்!

57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/58&oldid=1484494" இலிருந்து மீள்விக்கப்பட்டது