பக்கம்:காதலா கடமையா.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் - 18



("பாரிடைப் படர்ந்து பறிபடாச் சாதியின்
வேரிடை வெந்நீர் விட்டுக் களைந்தனர்.")


இடம்
கொன்றை நாட்டின்
ஊர்ப்புறம்.
உறுப்பினர்
மாழைப் பேரரசு,
ஒள்ளியோன், (மாற்றுருவினர்)
ஏற்றம் மிதிப்பவர்.


ற்றம் மிதிப்பார் இருவர். ஒருவன்
சேற்றுநீர்ச் சாலினைச் செங்கை பற்றிப்
பாடி இருந்தான் பழமை பற்றியே
பாடல் என் எனில்,

“ஐந்து சாதிகள் அந்தநாள் இருந்தன.
கொந்தி எடுக்குமே குடிகளை அவைகள்.
மேலான சாதி வேலைசெய் யாமல்
பாலான சோறும் பருப்பொடு நெய்யும்
உண்டு வாழுமே! ஊரில் மற்றவை
கண்டு நடுங்குமே கைகட்டி நிற்குமே
கீழான சாதி எக்கேடு கெட்டேனும்
கூழேயும் இன்றிக் குடிசையில் தூங்குமே

59

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/60&oldid=1484508" இலிருந்து மீள்விக்கப்பட்டது