பக்கம்:காதலா கடமையா.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் - 19



("செலவுக்குத் தருக என்றான். நின்ற
இலவுக்குநிகர் இதழ் ஏந்திழை மகிழ்ந்தாள்.)


இடம்
கொன்றை நாட்டின்
ஊர்ப்பொதுமன்று.
உறுப்பினர்
மாழைப் பேரரசு,
ஒள்ளியோன், (மாற்றுருவினர்)
பொதுமக்கள்.


ல மரத்தின் அடியில் ஒருவன்
காலைச் சப்பளித்துக் கணக்கனொடு குந்தி
உறுதி மொழியை உரைத்தான். என்னெனில்

“குறைவிலா எனது கொன்றைநாட் டாணையில்
இந்த அறமன் றில்என் உள்ளம் அறியநான்
வந்தார்க்குத் தீர்ப்பு வாய்மையில் வழங்குவேன்.”
என்னலும்,

உடனே ஒருத்தி மடமயில் போன்றாள்
நெடுவிழி நீரால் நிறைய அழுது
“மன்றுளீர் மன்றுளீர் என்றன் தலைவன்,

மணமாகாத மங்கையை நாடிப்
பணமாய்ப் பட்டாய் அணியாய் அவட்கு
நாடொறும் நாடொறும் நல்குவான் ஆனான்
ஈடேறும் வகை எதுவும் காணேன்.

61

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/62&oldid=1484422" இலிருந்து மீள்விக்கப்பட்டது