பக்கம்:காதலா கடமையா.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் - 20



(“கொழுத்த பன்றியின் கழுத்தை யறுத்துப்
படையலிட்டுப் பணிவதுண்டாம்”)


இடம்
கொன்றை நாட்டின்
ஒரு சிற்றில்.
உறுப்பினர்
மாழைப் பேரரசு,
ஒள்ளியோன், (மாற்றுருவினர்)
மருத்துவன், நோயாளி.


குறியதோர் வீட்டின் அறையினுள்ளே
சிறுவிசிப் லகையில் உறு நோயாளி
படுத்திருந்தான். அடுத்தொரு மருத்துவன்
எடுத்துப் பலபல இயம்புகின்றான்:

“கழலையை அறுத்தேன் கட்டினேன் மருந்திட்டு
இன்னும் இரண்டுநாள் எனை அழைக்காமல்
முன்போல் வாளா மூடி வைத்திருந்தால்
சாக்காடு தான்” என்று சாற்றிய அளவில்,
நோக்காடு குறைந்த நோயாளி கூறுவான்:
“அன்னை, எதையோ அரைத்துப் பூசினால்,
இன்னே இந்நோய் இராதென்று சொன்னதால்
நாட்கள் சென்றன” என்று நவில

63

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/64&oldid=1484429" இலிருந்து மீள்விக்கப்பட்டது