பக்கம்:காதலா கடமையா.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் - 22



(“துணிவும் கண்டாள் தூய நெஞ்சின்
தணிவு கண்டாள் தமிழ்ப் பற்றுக் கண்டாள்.”)


இடம்
கொன்றை நாட்டின்
ஒரு வீட்டுப் புறம்.
உறுப்பினர்
மாழைப் பேரரசு,
ஒள்ளியோன், (மாற்றுருவினர்)


காதல் நறுக்கைக் கைப்பட எழுதி
மாதுக் கனுப்பினான் மறவன் ஒருவன்!
எழுதியதன்றி, இன்பம் அடைந்திடும்
முழுநம் பிக்கையால் மொய்குழல் வீட்டின்
கொல்லைப் புறத்தில் குந்தி யிருந்து
வருவாள் என்று வழிபார்த் திருக்கையில்
அன்னவன் காதை, அவளும், அவளின்
அன்னையும் பேசுதல் அதிரச் செய்தது.
மங்கை சொன்னாள்:
“எங்கும் எப்போதும், இதனை எழுதிய
சேயிடம் என்னுளம் சென்ற தில்லை.
ஆயினும் தெருவில் அவன்பேர் சொல்லி

68

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/69&oldid=1484440" இலிருந்து மீள்விக்கப்பட்டது