பக்கம்:காதலா கடமையா.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நீட்டி அழைத்தது கேட்ட துண்டாதலால்
பேர் தெரியும்,
தோட்டத்து வருவதாய்ச் சொல்லுகின்றான்
பிழைபட நினைத்தான்
அவன் என்மானம் அழிக்கும் எண்ணமோ”
என்னலும்:

அன்னை அன்னவன் அனுப்பிய நறுக்கைத்
தன்கையில் தாங்கித் தலைநட்டுப்படிப்பவள்,
இடையிடை அவனை இகழ்ந்தாள், இகழ்ந்த சொல்
தொடர்ந்துதான் வரைந்த தூய தமிழிலும்
பட்டது. கேட்டான் பதைத்தான். ஐயகோ

“கெட்டவன் நானே. கெட்டவன் நானே.
என்னை இகழ்ந்த அன்னை, என்னால்
பொன்னிகர் தமிழை இன்னுயிர் ஒப்பதை
இகழ்ந்தாள் என்றே இடையில் தொங்கிய
வாளை உறையினின்று வாங்கி அன்னைபால்,
'காளை' நான் கொண்ட கருத்தின் பிழைக்கு
வாட்டுக என்னை, வாட்டிய பின்னை
நாட்டின் தமிழை நலிவுற இகழ்ந்ததற்கு
நின்கொடு நாவினை இன்னற் படுத்துக.”

என்றெதிர் நின்றான்! அன்னவன்
துணிவும் கண்டாள் தூய நெஞ்சின்
தணிவு கண்டாள் தமிழ்ப் பற்றுக் கண்டாள்
மங்கையோ, காதல் மடுவிற் குதித்தாள்.
மங்கையின் தாயோ “மங்காத் தமிழை
மங்க உரைத்தது மாப்பிழை” என்றே

69

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/70&oldid=1484445" இலிருந்து மீள்விக்கப்பட்டது