பக்கம்:காதலா கடமையா.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் - 24



(“தலைவரைச் சிறையில் தள்ளியது கொடிது
புலையோ களவோ கொலையோ புரிந்தார்?”)


இடம்
கொன்றை நாட்டுத்தெரு
மணிப்பொதுமன்று.
உறுப்பினர்
பொதுமக்கள்,
மாழைப் பேரரசு,
தங்கவேல், கிள்ளை.


விடிந்தது. ஒவ்வொரு தெருவிலும் வேல், வாள்
படிந்த தோளொடு படை மற வர்கள்
நெடுவிழி எரிபட நின்றனர். மக்களை
கடுமொழி கூறிக் கலைத்தனர். தெருவில்
நடப்பதும், தவறென நவில்வாரானார்.
படுப்பதும் தீதெனப் பகர்வா ரானார்.
வியந்தனர் சிலரே. வெகுண்டனர் சிலரே.
துயரில் கொன்றை தோய்ந்த தென்றார் சிலர்.
என்ன நடக்குமோ என்றனர் சில்லோர்.
ஈவான் விடுதலை என்றனர் சில்லோர்.
காவான் என்று கழறினர் சில்லோர்.
திடு திடு என்றொரு சிறு படை சென்று
மகிணனைச் சிறையில் வைத்து மீண்டது!

73

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/74&oldid=1484411" இலிருந்து மீள்விக்கப்பட்டது