பக்கம்:காதலா கடமையா.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“எதற்கவள் அழுதாள்” என்றான் மன்னன்
“மதிற்சிறை தன்னில் வாழ்வார் தம்மை
எண்ணி” என்றொள்ளியோன் இயம்பினான். மன்னன்,

"பெண் அவள், காதலன் பிரிவு பற்றி
வருந்தினாள் எனில், அவ் வருத்தம் கொல்லாது
பொருந்த நெஞ்சில் பூத்துக் காய்த்த
காதல்நோய் சாக்காடு கடிவதோர் மருந்தே!
ஆதலின், நானும் அஞ்சுதல் தீர்ந்தேன்.
நெடுநகர் மக்களின் நிலை யா" தென்றான்.

“விடிவதற்குள் மிகுபசித் தீயால்
சாவார்” என்று சாற்றினான் ஒள்ளி யோன்.

“இந்நிலை கிள்ளைக்குச் சொன்ன துண்டோ”
என்று மன்னன் கேட்டான். “இல்லை”
என்றான் ஒள்ளியோன். “எழுந்து போ கடிதில்,
படையின் தலைவனை அழைஎன”
விடைதந் தனுப்பினான் வேந்தன் அவனையே.

 

85

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/86&oldid=1484396" இலிருந்து மீள்விக்கப்பட்டது