பக்கம்:காதலா கடமையா.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் - 30



("செல்லச் செய்க சேயிழை, என்னைத்
திருமணம் புரியச் செப்பிடச் சொல்க")


இடம்
கொன்றை நாட்டு
அரண்மனை.
உறுப்பினர்
மாழைப் பேரரசு.


“மங்கை கிள்ளை மன்னனை மணந்தால்
இங்குள தொல்லைகள் ஏகும் என்றும்,
இதற்கே மகிணன் இடையூறாக
இருந்திடு கின்றான் என்றும், நகரத்து
வீடு தோறும்நீர் விரைவிற் சென்று
சொல்லவேண்டும். சொன்னபின் அவர்களை
மகிண னிடத்திலும் மற்றவரிடத்திலும்
செல்லச் செய்க சேயிழை, என்னைத்
திருமணம் புரியச் செப்பிடச் சொல்க
சிறையினை உடனே திறந்து விடுக
மகிணன், தாரோன், வாட்பொறை ஆகியோர்
எங்கணும் போகலாம் என்று கூறுக.
விரைவிற் செல்லுதல் வேண்டும்” என்று
மன்னன் உரைத்தான் நன்றெனச்
சென்றனர் படைத்தலை வன்முதல் சிலரே.

86

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/87&oldid=1484398" இலிருந்து மீள்விக்கப்பட்டது