பக்கம்:காதலா கடமையா.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் - 31



("மங்கை கிள்ளை, மன்னனை மணக்க!
மகிணன், இதனைமறுத்தல் வேண்டாம்")


இடம்
கொன்றை நாட்டின்
முன்னாள் அரண்மனை.
உறுப்பினர்
மகிணன், தாரோன்,
வாட்பொறை, கிள்ளை,
மக்கள்.


டுத்தபசி என்னும் காட்டாறு, மாந்தராம்
மடித்த சருகுகளை அடித்து வந்து
சேயிழை வீட்டிற் சேர்த்தது. சிறையின்
வாயிலி னின்று மகிணன் வாட்பொறை,
தாரோன் அனைவரும் தையல்பால் வந்தனர்.

யாரே வெறுப்பார் எளியோர் நிலையை?
கிள்ளையோ தனது கீற்றுப் புருவம்
நெற்றிஏற நீள்இமை ஆடாது
பற்றுளம் பதறப், பார்த்தனள் மாந்தரை.

மகிணன், பதைத்தான்! வாட்பொறை அழுதான்!
தாரோன், மக்கள் சாற்றும் மொழிகளை

87

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/88&oldid=1484399" இலிருந்து மீள்விக்கப்பட்டது