பக்கம்:காதலா கடமையா.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பணமிலார் பொங்கல்நாள் அணுகினார்போலச்
செல்வியும், மகிணனும் திடுக்கிடு நெஞ்சொடு
சொல்வ தொன்றும் தோன்றா திருந்தனர்.
தாரோன் அவர்நிலை நேரில் அறிந்து
நீராழ்ந்த மூச்சு, நிலை காண எண்ணல்போல்
செய்வகை நாடினான். தெரியாது துடித்தான்.
நெய்உகுத்த நெருப்பு நெஞ்சொடு வாட்பொறை,

“கொன்றை நகரக் குடிகளே, கேளீர்,
இன்றிதோ மன்ன னிடம்நான் செல்வேன்.
மாலைஇது போகக் காலையில் மணத்தின்
வேலையோ, அன்றி வேறெதோ ஆம்என்று
கூறி, அருள்செய்யு மாறுகேட்பேன்.
தேறுக உள்ளம். செல்க” என்றான்.
ஊராளும் வாட்பொறை சொல்லை
யாரே விலக்குவார்? ஏகினார் ஆங்ஙனே.

 

89

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/90&oldid=1484404" இலிருந்து மீள்விக்கப்பட்டது