பக்கம்:காதலா கடமையா.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் - 32



(“இந்தத் தெவிட்டாக் கவிதையைப்
புகழ்ந்தால் புகழே புகழ்பெறும் அன்றோ”)


இடம்
கொன்றை நாட்டின்
அரண்மனை.
உறுப்பினர்
வாட்பொறை,
மாழைப் பேரரசு.


ழை வாட்பொறை, ஏந்தலைக்கண்டான்
மாழை நாட்டு மாப்பே ரரசே,
மக்கள் பசியால் வருந்தினர். வீட்டில்
புக்கவர் வெளியிற் போகா தடைத்தீர்
குற்றமற்ற குடிகளை வாட்டுதல்
கற்ற மக்கள் காட்டும் திறனோ?

அவள் உளம் அவன்மேல் ஆழ்ந்துகிடப்பதாம்.
குவிபொருள் வறியவன் கொண்டதுபோலத்
துவரிதழ்க் கிள்ளைபால் தோய்ந்த நெஞ்சை
மாற்ற முடியாது மகிணன் கிடந்தான்.
உலகுக் கழகை ஊட்டுமோர் காதற்
கலவை நிகழ்ச்சியைக் காணினும் கேட்பினும்
மாந்தரின் தந்தைநேர் மன்னன் மகிழ்வதா?
போந்து சிதைப்பதா? வேந்தே வேந்தே.

90

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/91&oldid=1484405" இலிருந்து மீள்விக்கப்பட்டது