பக்கம்:காதலா கடமையா.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் - 33


("நாட்டுக் குரிமை நன்றா? என்னுயிர்
வாட்டும் காதற்கு வகை செயல்நன்றா?")


இடம்
கொன்றை நாட்டின்
முன்னாள் அரண்மனை.
உறுப்பினர்
கிள்ளை,
தாரோன்.


ஞ்சணைமீது பச்சை மயில்கிடந்து
நெஞ்சு புண்ணாக நினைந்து நினைந்து
வழியறி யாமல் அழுத கண்ணும்
செழுநிலா முகமும் சிவக்க லானாள்.
வாழ்வு, மகிணனை மணப்பதாகும்.
சாவு, மகிணனைத் தவிர்ப்பதாகும்.
வஞ்சி நான் மன்னனை மணப்ப துண்டோ,
நெஞ்சு பொறாததை நிகழ்த்தினான் மன்னன்.
படைவலி மிக்க கொடியவன் சொன்னான்.
நடைமுறை அறியாது நவின்றான். அந்தோ
மக்களைப் பசிக்கனல் வாட்டச் செய்தான்.
எக்கடன் உடையேன், என்பதும் அறியேன்.
நாட்டுக்குரிமை நன்றா? என்னுயிர்
வாட்டும் காதற்கு வகை செயல் நன்றா?

92

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/93&oldid=1484506" இலிருந்து மீள்விக்கப்பட்டது