பக்கம்:காதலா கடமையா.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் - 34



("உன்கையால் கிள்ளையின் உயிரைப் போக்கு
வேறு வழி ஏது? விளம்பினேன் இதனை")


இடம்
கொன்றை நாட்டில்
மலர்ப் பூங்கா.
உறுப்பினர்
மகிணன்,
அமைச்சன்.


நான் இறப்பேனேல், மான் இறந்திடுவாள்
இறந்திடுவாள் எனில், இறக்கும் அவள் கற்பும்.
அவளைநான் அணுகி, ஐயோ ஐயோ
துவரிதழ்க் கிள்ளையே, துணைவனாய் மன்னனைக்
கொள்க என்பது கொள்கை யல்லவே,
கொள்கை என்று கூறினும் அவளோ
தாங்காள், இறப்பாள், சற்றும் பொறாளே.
ஏங்குமென் நிலையை எவர்தாம் அறிவார்?
மக்கட்கு நான் இன்று வழுத்துவதென்ன?
தக்கது யாவரே சாற்றுவார் எனக்கே?
என்று மகிணன் இரவில் தனியாய்
ஒன்றும் அறியா துலாவி யிருந்தான்.
மகிணன் உலாவும் மலர்ப்பூங் காவில்,
புகுவான் ஓர்ஆள், “மகிணனே" என்றான்.

95

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/96&oldid=1484486" இலிருந்து மீள்விக்கப்பட்டது