பக்கம்:காதலும் கடமையும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலும் கடமையும் 19 சரோஜா : ஏதாவது ஜீரணக் கோளாருக இருக்கு. மோ என்னவோ? டாக்டரிடத்திலே கேட்கலாமா? மருந்து சாப்பிட்டால் எல்லாம் சரியாகிவிடும். நாளேக்கு டாக்டரிடம் போகலாம். மீளுட்சி : இனிமேல் இந்த வயசிலே மருந்து சாப் பிட்டு என்ன ஆகப்போகுது? உன்னை ஒருத்தன் கையிலே பிடித்துக் கொடுத்துவிட்டால், என் கவலையெல்லாம் தீர்ந்து போகும். சரோஜா : அம்மா, உனக்கு எப்பப் பார்த்தாலும் அந்தக் கவலேதான். அதல்ைதான் உடம்புகூடக் கெட்டுப்போகிறது. மீட்ைசி : ஆமாம் சரோஜா. உண்மையிலேஅந்தக் கவலேதான் என்னை வாட்டுகிறது. சரோஜா (மகிழ்ச்சியோடு) : இனிமேல் உனக்கு அந்தக் கவலை வேண்டாமம்மா. இன்றைக்கு டாக்டர் நிச்சயமாகச் சொல்விவிட்டார். மீனுட்சி : அவரைப் பார்க்கத்தான் அவசரம் அவசரமாகச் சாயங்காலம் வெளியே போயிருந்தாயா? டாக்டர் என்ன சொன்னுர்? சரோஜா (முகத்தில் சற்று நானத்தோடு) : சீக்கிர மாகக் கலியானத்திற்கு ஏற்பாடு செய்யலாமென்று சொன்ஞர். மீனுட்சி : நிஜமாகவா சரோஜா? சரோஜா : நிஜமாகத்தான் அம்மா. உனக்கு ாதுக்கு இந்தச் சந்தேகம்? மீளுட்சி : அவர்களெல்லாம் பெரிய இடத்தைச் சேர்ந்தவர்கள். நம்மைச் சரியாக மதிப்பார்களா?