பக்கம்:காதலும் கடமையும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலும் கடமையும் 35 சரோஜா : கடிதமா? சற்று நேரத்திற்கு முன்பு தானே டாக்டரிடம் பேசிக்கொண்டிருந்தீர்கள்? ராஜூ : எல்லாம் பேசவில்லை. ஒரு முக்கியமான விஷயம் விட்டுப்போயிற்று. அதைத்தான் கடிதத்திலே எழுதப்போகிறேன். - சரோஜா : டாக்டரிடத்திலே கடிதத்தைக்கொடுக்க எனக்கு என்ன ஆட்சேபமிருக்க முடியும்? ஆளுல்... நீங்கள் என்னப்பற்றி எதுவும் எழுதக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். டாக்டரிடம் நேரில் நீங்கள் பேசியதைப்பற்றியே என்மீது அவர் கோபத்தோடு போயிருக்கிருர். - - -------- - -- ராஜு உங்களைப் பற்றி ஒன்னும் எழுதப்போவ தில்லை. எல்லாம் என்னைப்பற்றித்தான். அந்தக் கடிதத்தை நீங்களே டாக்டரிடம் நேரில் கொடுக்க வேணும். சரோஜா : நானே நேரில் போகமுடியாது. ஆளுல் அந்தக் கடிதம் டாக்டரிடம் நிச்சயமாகச் சேரும்படி நான் பார்த்துக்கொள்கிறேன். ராஜு (சற்று யோசித்து) சரி. அப்படிச் செய் தால் போதும். கடிதம் டாக்டர் கையில் கிடைக்காமல் போகக்கூடாது. அதற்கு நீங்கள் உறுதி கொடுக்க வேணும். சரோஜா : அதற்கு நான் பொறுப்பு. சரிதானே. ராஜு : சரியம்மா - இப்பொழுதே கடிதத்தை எழுதி வைக்கிறேன். நீங்கள் ரயிலுக்குப் புறப்பட எல்லாம் தயார் செய்யுங்கள். - [ராஜூ உள்ளே எழுந்து போகிருன். சரோஜா யோசனையோடு நிற்கிருள்.) திரை