பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 99

விழுந்தது. அதற்குமேல் அவன் தாமதிக்கவில்லை; விருட் டென்று எழுந்து வெளியே வந்து கதவைத் தட்டினான்.

“யார் அது?” என்று உள்ளேயிருந்து ஒரு கேள்வி பிறந்தது. ‘மனிதன்’ என்றான் மணி. ‘உள்ளேயிருப்பவனும் மனிதன்தான்; நீ போய் உன் வேலையைப் பார்’ என்றான் அவன்.

அவ்வளவுதான்; அடுத்தகணம் உதை ஒன்றா யிருந்தாலும் கதவு இரண்டாயிற்று

‘நீங்களா’ என்றாள் அருணா, வியப்புடன். ‘நீயா என்றான் மணி, தன் தலையைத் தானே

தொங்க விட்டுக்கொண்டு.

15. கலாச்சாரத்தில் ஒர் அனாச்சாரம்!

கதவு உடைந்த சத்தம் கேட்டதும், ‘என்னடா, அது?” என்று கீழே இருந்தபடியே, தம்முடைய குரலை உச்சகட்டத்துக்கு உயர்த்தினார் ஒட்டல் முதலாளி.

“என்ன சர்மாஜி’ என்று பதிலுக்குக் குரல் கொடுத்துக் கொண்டே, மடமட"வென்று கீழே இறங்கி வந்தான் மணி. அவனைக் கண்டதும் அவருடைய சுருதி ஏனோ குறைந்தது; ‘ஒன்றுமில்லை. மேலே ஏதோ சத்தம் கேட்டதே என்று கேட்டேன்-ஏன், கேட்கலாமோ இல்லையோ?” என்றார் அவர், நெளிவு குழைவுடன்.

‘கேளுங்கள் கேளுங்கள், தாராளமாகக் கேளுங்கள்: காலையில் ஒரு காதல் ஜோடிக்கு நீங்கள் இங்கே இடம் கொடுத்தீர்கள் அல்லவா? அந்தக் காதல் ஜோடி முறை தவறி நடக்க முயன்றது; நான் அதைத் தடுக்க முயன்றேன். அதன் பலன் கதவு உடைந்தது-ஏன், உடையலாமோ