பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 காதலும்கல்யாணமும்

இல்லையோ?” என்றான் மணி, பேசுவதில் தானும் அவருடைய பாணியையே பின்பற்றி.

‘என்ன, இப்படிக் கேட்டுவிட்டீர்கள் தர்மத்துக்காக எதையும் செய்யலாம் என்று சாஸ்திரமே சொல்கிறதே?அப்புறம் என்ன, நான் சொல்வது சரியோ இல்லையோ?”

‘சரி ரொம்பச் சரி; ஆனால் அந்தத் தர்மம் கல்யாண மாகாத காதல் ஜோடிகளுக்குக் கூட இங்கே இடம் கொடுக்கலாம் என்று சொல்கிறதா? இல்லை, தெரியாமல் தான் கேட்கிறேன்-ஏன், கேட்கலாமோ இல்லையோ?”

‘நன்றாகக் கேட்டீர்கள் புண்ணியத்திலும் புண்ணியம் மகா புண்ணியமல்லவா, அது? தாகத்துக்குத் தண்ணிர் கொடுப்பதில் எத்தனை புண்ணியம் இருக்கிறதோ, அத்தனை புண்ணியம் அதிலும் இருக்கிறது என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். இல்லையென்றால் அவர்களுக்கு நான் இங்கே இடம் கொடுத்திருப்பேனா9- ஏன், கொடுக்கலாமோ இல்லையோ?”

‘கொடுங்கள் கொடுங்கள், தாராளமாகக் கொடுங்கள். ஆனால் தாகத்துக்குத் தண்ணிர் கொடுப்பதில் புண்ணியம் இருக்கலாம்; ஒரு பெண் தன் கற்பை இழப்பதற்கு வசதி செய்துக் கொடுப்பதில் கூடவாப் புண்ணியம் இருக்கிறது?இதைப்பற்றிப் பெரியவர்கள் என்ன சொல்கிறார்கள், அதை நானும் தெரிந்துக் கொள்ளலாமோ இல்லையோ?”

அவ்வளவுதான்; தர்மத்தையும் புண்ணியத்தையும் விட்டுச் சற்றே நழுவி, ‘யார் எதை இழந்தால் என்ன. சுவாமி? அதற்காக எனக்குக் கிடைக்கும் காசைநான் இழந்துவிட முடியுமா? உங்களைப் போன்றவர்களுக்கு ஓர் அறையை வாடகைக்கு விட்டால் நாளொன்றுக்கு ஒரு ரூபாய் எனக்குக் கிடைக்கிறது. அதே அறையை அவர்களைப் போன்றவர்களுக்கு விட்டால் நாளொன்றுக்குப் பத்து ரூபாய் எனக்குக் கிடைக்கிறது. இதில் எதை விரும்புவான் ஒரு வியாபாரி ? அவனுக்குத்தான் கொள்கை,