பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 101

குறிக்கோள் என்று ஒன்றுமே கிடையாதே!. என்ன, நான் சொல்வது உண்மையோ இல்லையோ?” என்றார் அவர், வியாபாரத் தோரணையில்.

‘இது இல்லாவிட்டால் அது; அது இல்லாவிட்டால் இது. எது இருந்தாலும், எது இல்லாவிட்டாலும் ஒன்று மட்டும் நிச்சயம். அதாவது, எந்த அக்கிரமத்தைச் செய்தாலும் அந்த அக்கிரமத்தைத் தர்மம், புண்ணியம், சாஸ்திரம். சம்பிரதாயம் என்று ஏதாவது ஒன்றின் மேல் செய்ய வேண்டியது. இதுதான் உங்கள் கொள்கை, குறிக்கோள் எல்லாம். இல்லையா?”

‘அதுவேதான், அதுவேதான்’ இதைச் சொல்லிவிட்டு அவர் சிரித்தார்; அந்தச் சிரிப்போ அவனுக்கு நெருப்பாயிருந்தது. இருந்தாலும் அதை ஒருவாறு அடக்கிக் கொண்டு, ‘இப்போதுதான் எனக்குத் தெரிகிறது. தன்னுடைய லட்சிய சித்திக்காகப் போரைத் துவங்கிய ஹிட்லர், முதலில் அங்கிருந்த வியாபாரிகளையெல்லாம் ஏன் சுட்டுக் கொல்லச் சொன்னான் என்று? எனக் கருவிக்கொண்டே அவன் மேலே போனான்.

‘தப்பிவிட்டார்கள் சார், அவர்கள் உங்களிடமிருந்து -தப்பிவிட்டார்கள்!’ என்றான் சங்கர். -

‘தொலையட்டும் சனியன்கள் அந்தச் சனியன்களை அதற்கு மேல் என்னால் என்ன செய்ய முடியும்? என் கண்ணுக்கு முன்னால் படுகுழியில் விழுவதற்கு இருந்தனர். அதை என்னால் பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை. தடுத்தேன்; அவ்வளவுதான் என்னால் முடிந்தது’ என்று சொல்லிக் கொண்டே தன் அறைக்குள் நுழைந்த மணி, கழற்றி விட்ட செருப்பை மறுபடியும் தன்னுடையக் காலில் மாட்டிக்கொண்டு “ஏண்டா சங்கர், இந்த ஒட்டல் முதலாளியை இழுத்துக் கொண்டு போய்ப் போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டு வந்தால் என்ன?’ என்றான் ஏதோ யோசனையுடன் அப்படியும் இப்படியுமாக நடை போட்டுக்கொண்டே.