பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 காதலும்கல்யாணமும்

அட, கடவுளே! கடைசியில் இப்படியா வழி காட்டியிருக்கிறாய், என் தங்கைக்கு? இப்போது நான் என்ன செய்வேன், எப்படி இவரைப் பார்க்காமல் இருப்பேன்? எனக்கு இவரைத் தெரியும்; இவருக்கும் என்னைத் தெரியும். இதனால் ஒருவேளை இந்தக் கல்யாணம் நின்றுவிட்டால்?

இப்படி நினைத்தாளோ இல்லையோ, சட்டென்று பின் வாங்கி மீனாட்சி அம்மாளின் அறைக்குள் நுழைந்து, ‘அம்மா, அவள் அவரை அழைத்துக்கொண்டு வந்து விட்டாள், அம்மா ஆனால் ஒரு சங்கடம்; நான் ஒருத்தி இருப்பது அவருக்குத் தெரியக்கூடாது’ என்றாள் அவள் படபடப்புடன்.

‘ஏன் தெரியக்கூடாதாம்?’ என்றாள் மீனாட்சியம்மாள், ஒன்றும் புரியாமல்.

‘அதெல்லாம் அப்புறம் சொல்கிறேன், இப்போது நீங்கள் போய் அவர்களைக் கொஞ்சம் கவனியுங்களேன்?” என்று அந்த அம்மாளை எழுப்பி அனுப்பிவிட்டுத் தன் தலையை மறைத்துக்கொண்டு விட்டாள் அவள்

‘வாருங்கள், வாருங்கள்!” என்று சொல்லிக்கொண்டே வெளியே வந்த மீனாட்சியம்மாளைக் கண்டதும், ‘கல்யாணத்துக்கு முன்னால் என்னை நீங்கள் இவ்வளவு துணிவுடன் வரவேற்பீர்களென்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை!” என்றான் மோகன், என்றுமில்லாத தைரியத்தை எங்கிருந்தோ வரவழைத்துக்கொண்டு.

“உட்காருங்கள்! இந்தக் காலத்து ஆண்பிள்ளைகளுக்குத் தான் துணிவில்லையே, பெண் பிள்ளைகளுக்காவது அது இருக்க வேண்டாமா?’ என்றாள் மீனாட்சியம்மாள், தானும் உட்கார்ந்து.

‘அப்படியா சமாச்சாரம்? இப்போதுதான் எனக்குத் தெரிகிறது, பாமா யாரால் இவ்வளவு தூரம் துணிந்திருக் கிறாள் என்று'