பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 165

‘அவ்வளவு சீக்கிரம் அது முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை!” என்றான் மோகன்.

அப்போது, ‘உங்களால் முடியாவிட்டால் சொல்லுங்கள், நானே வந்து அவர்களை அழைத்துக் கொண்டு வருகிறேன்!” என்று யாரோ சொல்வது அவர்கள் காதில் விழுந்தது; இருவரும் திரும்பிப் பார்த்தனர். சொக்கலிங்கனார் காரைத் கொண்டு போய் ஷெட்'க்குள் நிறுத்திவிட்டு உள்ளே வந்துக் கொண்டிருந்தார்.

‘அதற்குள் நீங்கள் எப்படித் தெரிந்துகொண்டீர்கள், இவரை?’ என்றாள் வியப்புடன்.

‘அசடு வழிவதிலிருந்தே தெரியவில்லையா, அது?” என்றார் அவர் சிரித்துக்கொண்டே.

‘அப்படியெல்லாம் சொல்லாதீர்கள்; அவர் கோபித்துக் கொண்டுவிடப் போகிறார் என்றாள் அவள்.

அப்போது கையில் காபித் தட்டுடன் பாமா அங்கே வர, ‘கோபித்துக்கொண்டால் பாமாதான் இருக்கிறாளே, சமாதானம் செய்ய!’ என்றார் சொக்கலிங்கனார். i

‘இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தால் இன் னொரு முறை நான் இங்கே வரமாட்டேன்!” என்றாள் பாமா வெட்கத்துடன்.

‘ஏன், கதவுக்குப் பின்னால் நின்று நாங்கள் பேசுவதையெல்லாம் ஒட்டுக் கேட்டுக்கொண்டிருக்கலா மென்று நினைக்கிறாயா?” என்றார் அவர், அப்போதும் அவளை விடாமல். - ‘இதற்கெல்லாம் அவசியம் ஏது, இந்தக் கல்யாணத் தில்? நீயும் இப்படி உட்கார், பாமா என்று தனக்குப் பக்கத்தில் அவளை உட்கார வைத்துக்கொண்டாள் மீனாட்சியம்மாள்.

எல்லோரும் காபி சாப்பிட்டு முடிந்த பிறகு, ‘பாமாவின் அக்காவை நான் இன்னும் பார்க்கவே யில்லையே?’ என்றான் மோகன்.