பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 காதலும்கல்யாணமும்

‘ஏன் இல்லை? ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறதோ, அந்தச் சம்பந்தம் அதிலும் இருக்கிறது இந்தக் காலத்தில்! இதுகூடத் தெரியாமல் நீர் எதற்குத்தான் பிரம்மச்சாரியாயிருக்கிறீரோ, எனக்குத் தெரியவில்லை!” என்று சொல்லிக்கொண்டே அவர் அருணாவை நெருங்கி, ‘அம்மா, அம்மா! இங்கே பார், அம்மா?’ என்றார் கனிவுடன்,

அப்போதுதான் சற்றே சலனமுற்ற தன் கண்களால் அவள் அவரை மிரண்டு நோக்கினாள்!

‘'சபாஷ் நன்றாகப் பார் என்னை, நான்தான் உன் அப்பா!’ என்றார் அவர், அவளுக்கு ஆளை அடையாளம் தெரிகிறதா என்பதைத் தெரிந்துகொள்வதற்காக.

அவ்வளவுதான்; ‘ஐயோ, அப்பாவா? வேண்டாம், வேண்டாம்!” என்று அலறினாள் அவள்.

அவர் சிரித்து, ‘நான் அப்பா இல்லை அம்மா, அண்ணா!’ என்றார் மீண்டும்.

‘அண்ணாவா! நீ எப்படி அண்ணா, இங்கே வந்தாய்?” என்றாள் அவள்.

“தேவலையே, ஆளைத் தெரியாவிட்டாலும் இடத்தைத் தெரிகிறதே? இனிப் பயமில்லை!” என்றார் அவர்.

அதற்குள் ஆறாய்ப் பெருகிய வியர்வையைத் தன் முந்தானையால் துடைத்துவிட்டு, ‘துரங்கம்மா, துங்கு!’ என்றாள் பார்வதி.

அருணா சற்றேப் புரண்டுக் கண்ணை மூடினாள்! ‘நாங்கள் வருகிறோம்; இனி நீரும் கவலையின்றித் தூங்கலாம்’ என்று விடை பெற்றுக்கொண்டார் பக்கத்து வீட்டுக்காரர், தன் மனைவி பார்வதியுடன்.

அவர் சொல்லி விட்டுச் சென்றபடி, பரந்தாமன் துரங்கவில்லை; தன் முயற்சித் தனக்களித்த வெற்றிக் களிப்பில் மீண்டும் அருணாவுக்கு ஒத்தடம் கொடுக்க ஆரம்பித்து விட்டார் .