பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 காதலும்கல்யாணமும்

‘ஏன், மணியைத்தான் இப்போது நடந்ததெல்லாம் அவனுடைய சூழ்ச்சிதான் என்பது இன்னுமா தெரிய வில்லை, உனக்கு?’ என்றான் மோகன், அந்த நிலையிலும் அவளைத் தன் வயப்படுத்த.

‘உண்மையாகவா?’ என்றாள் அவள், வியப்புடன். ‘சந்தேகமில்லாமல் அவன்தான் அந்தக் குடிகாரனை நம்மேல் ஏவி விட்டுவிட்டு, அவனுக்குப் பின்னால் ஒரு பாவமும் அறியாதவன் போல் வந்திருக்கிறான்’

‘'காரணம்?” ‘உன்மேல் அவனுக்கு ஒரு கண்’ ‘'என் மேல் ஒரு கண்ணா என்னால் நம்ப முடியவில்லையே, இதை?”

‘ஏன் நம்பமுடியவில்லை?” ‘ஆபீசில் அவரைப் பற்றிச் சொல்லப்படும் கதைகள். இதை நான் நம்பக் கூடியதாயில்லை!”

‘அது என்ன கதைகள், அவனுடைய நண்பனான எனக்குத் தெரியாத கதைகள்?”

‘யாரோ ஒருத்தி வருடக்கணக்கில் அவரை வளைய வந்து கொண்டிருந்துவிட்டுக் கடைசியாக ஒரு நாள் தன் காதலை வெளியிட்டாளாம்; அவரோ தூ’ என்று அவளுக்கு முன்னாலேயே காரித் துப்பிவிட்டு அப்பால் போய் விட்டாராம்!”

‘இவ்வளவுதானே, அவளை அவனுக்குப் பிடித்திருக்காது!’

‘என்னை மட்டும் பிடிக்க நான் என்ன ரம்பையா, ஊர்வசியா?”

‘நமக்குத் தெரியாதவர்களையும் நம்மால் பார்க்க முடியாதவர்களையும் நாம் ஏன் உவமைக்காக எடுத்துக் கொள்ள வேண்டும்? நீ அழகு காட்டினால் சரோஜாதேவி;