பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 65

ராதா திரும்பினாள்; வழியில், இன்று மாலைதான் அவரை இங்கே அழைத்துக்கொண்டு வரப்போகிறோமே, அதையும் அக்காவே அவரிடம் சொல்லிக்கொள்ளட்டுமே!’ என்று நினைத்துப் பாமா எங்கே சொல்லாமல் இருந்து விடுவாளோ என்ற சந்தேகம் வந்துவிட்டது அவளுக்கு; மறுபடியும் குளிக்கும் அறைக்குள் நுழைந்தாள்.

“என்ன அக்கா?’ என்றாள் பாமா “ஒன்றுமில்லை. அதை நானே அவரிடம் சொன்னால் அவ்வளவு நன்றாயிராது; நீயே சொல்லவேண்டும். என்ன, தெரிந்ததா?”

“தெரிந்தது’ ‘அதற்காக நீ அவரை இங்கே அழைத்துக்கொண்டு வராமல் இருந்து விடாதே!’

‘இல்லை’ ராதா திரும்பினாள்; “அக்கா” என்றாள் பாமா. ‘என்ன? ‘ ‘இனிமேல் ஏதாவது சொல்வதாயிருந்தால் குளித்து விட்டு வந்த பிறகு சொல்கிறாயா?”

அவ்வளவுதான்; ‘போடி, போ! நான் அடுப்பில் பாலைப் போட்டுவிட்டு வந்திருக்கிறேனாக்கும்?’ என்று அவள் முகத்தில் அடித்தாற் போல் சொல்லிவிட்டு, அவசரம் அவசரமாக நடையைக் கட்டினாள் ராதா.

அதற்குள் விழித்தெழுந்துவிட்ட தன் கணவருக்காகத் தானே காபியைக் கலந்து எடுத்துக்கொண்டு வந்த மீனாட்சி, “நான் ஒரு வார்த்தை சொன்னாலும் சொன்னேன், இப்படியா அவள் உயிரை வாங்கிக்கொண்டிருப்பாய்?’ என்றாள் சிரித்துக்கொண்டே.

அப்போது, “எங்கே காபி?” என்று கேட்டுக்கொண்டே அங்கே வந்த சொக்கலிங்கனார், “என்ன, அது?” என்று தம் மனைவியை மெல்ல விசாரித்தார்.

கா.க -5