பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 காதலும்கல்யாணமும்

‘அன்றொரு நாள் இரவு நாம் பாமாவை யாரோ ஒரு பையனுடன் பார்க்கவில்லையா? அதை நான் இவளிடம் சொன்னேன். அவ்வளவுதான்; அவள் உயிரை வாங்க ஆரம்பித்துவிட்டாள், இவள்!”

“சரி, அவன் எப்போது வருகிறானாம், இங்கே?”

‘வரும்போது வருகிறான்; அதைப்பற்றி இப்போது என்ன?”

‘ஒன்றுமில்லை; பேரன், பேத்தி எடுக்க வேண்டிய இந்தக் காலத்தில்கூட நீ வெறும் பொம்மைக் கல்யாணமாகவே செய்து பார்த்துக் கொண்டிருக்கிறாயே, நிஜக் கல்யாணம் ஒன்றாவது செய்து பார்க்க மாட்டாயா என்றுதான் கேட்கிறேன்!” என்றார் அவர்.

இவற்றையெல்லாம் கேட்டும் கேட்காதவள் போல் நடந்து கொண்ட பாமாவுக்கு, இவர்கள் காட்டும் இத்தனை அன்புக்கும் உரியவர்தானா, அவர்?’ என்ற சந்தேகம் ஏனோ வந்து விட்டது. அந்தச் சந்தேகத்துடனேயே அவள் அன்று ஆபீசுக்குச் சென்றபோது, மோகனும், மணியும் ஒருவர் தோள்மேல் ஒருவர் கையைப் போட்ட வண்ணம் ஏதோ பேசிக்கொண்டே அவளுக்கு எதிர்த்தாற்போல் வந்தார்கள். ‘இதென்ன கூத்து? என்று அவள் திடுக்கிட்டு நின்றபோது, மோகன் அவளைப் பார்த்துவிட் டான்.

அவ்வளவுதான்; தன்னை அறியாமல் மணியின் தோளின் மேல் கிடந்த தன்னுடைய கையை அவன் சட்டென்று எடுத்தபோது, மணி சிரித்த அந்தச் சிரிப்பு, அவன் சிரித்த சிரிப்பாகத் தோன்றவில்லை அவளுக்கு; உண்மை சிரித்த சிரிப்பாகவே தோன்றிற்று