பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 காதலும்கல்யாணமும்

அப்போது அன்றொரு நாள் பார்த்த அதே ‘ஸ்கூட்டர் அவர்கள் வீட்டு வாசலில் வந்து நிற்க, ‘இந்தக் காதல் ஜோடிதானா நீங்கள் சொன்னது?” என்றாள் அவர்களுடன் இருந்த மாணவி.

அவ்வளவுதான்; பாமாவை அவசர அவசரமாக இறக்கிக் கீழே விட்டுவிட்டு, ‘இன்றுவேண்டாம்; இன் னொரு நாளைக்கு’ என்று சிட்டாய்ப் பறந்தான், மோகன்.

காரணம் வேறொன்றுமில்லை; அவனைப் பார்த்த அந்த மாணவி, அவன் தங்கை அருணாவாயிருந்ததுதான்!

12. கருணை வள்ளலும் காதல் வள்ளலும்

அன்றிரவு அருணா வீட்டுக்கு வந்தாளோ இல்லையோ, ‘அப்பா, அப்பா உங்களுக்கு ஒரு சந்தோஷச் சேதி, அப்பா!’ என்று கத்திக்கொண்டே மாடிப்படிகளில் காலை எடுத்து வைத்தாள்.

இதை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மோகன் ‘விருட்டென்று தன் அறையை விட்டு வெளியே வந்து, ‘அருணா, அருணா சொல்லாதே அருணா!’ என்று கெஞ்சாத குறையாகக் கெஞ்சி, அவள் கையைப் பற்றி இழுத்தான்.

‘'சும்மா சொன்னால் கேட்டுக்கொண்டு விடுவேனா, நான்? எடு, ஏதாவது!” என்று கையை நீட்டினாள் அவள்.

அவள் நீட்டிய கையில் ஒரு ரூபாயை எடுத்து வைத்து, ‘இப்போதைக்கு இதை வைத்துக் கொள்; சம்பளம் வந்ததும் உன்னை நான் கவனித்துக்கொள்கிறேன்’ என்றான் அவன்.

“யாருக்கு வேண்டும், ஒரு ரூபாய்? நீயே வைத்துக் கொள்!” என்று அதை அவனிடமே திருப்பிக் கொடுத்து விட்டு, ‘அப்பா, அப்பா!’ என்றாள் அவள், மறுபடியும்.