பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 81

வரலாற்றில் வரும் வேசியிடம் கருணை காட்டிய கவுதமர் நமக்கு எப்படித் தெரிகிறாரோ, அப்படி

அன்றுகூட அப்படித்தான் நடந்தது-அவரைச் சாப்பாட்டுக்கு அழைப்பதற்காக மேலே வந்த அவருடைய மனைவி அன்னபூரணியம்மாள், ‘இந்த இழவெல்லாம் உங்களுக்கு என்னத்துக்கு? எந்தத் திருடனாவது, எப்படி யாவது போகிறான்’ என்று வழக்கம்போல் கடிந்து கொண்டதற்கு அவர் என்ன சொன்னார், தெரியுமா?-"மனசு கேட்கவில்லையேடி இல்லாத கொடுமை திருடுகிறான்; அவனைப் போலீசாருக்குக் காட்டிக் கொடுப்பதில் எனக்கு என்ன லாபம்?’ என்றுதான் சொன்னார்-உண்மைதானே, லாபம் அவருக்கு இல்லைதானே?

ஆயினும் ஏதோ ஒரு சந்தேகம் நீண்ட நாட்களாகவே அந்த ‘நல்ல உள்ளத்தை அரித்துக்கொண்டு இருந்தது; அந்தச் சந்தேகத்தை மனத்தில் வைத்துக் கொண்டு சொன்னாள்-அதையும் சாப்பாட்டுக்குப் பிறகு வெற்றிலை மடித்துக் கொடுத்துக் கொண்டே சொன்னாள்:

‘இன்று ஒரு நல்ல சேதி என் காதில் விழுந்ததுபையனுக்கு உத்தியோகம் உயரப் போகிறதாம்; உத்தியோகம் உயர்ந்தால் ஊதியமும் உயரத்தானே உயரும் -இனி மேலாவது, அந்தத் திருட்டுப் பயல்கள் இங்கே வராமல் இருக்கட்டுமே?”

அவர் சொன்னார்; அதற்கும் அசைந்து கொடுக்காமல் சொன்னார்:

‘போடி பைத்தியமே! நானா வரச்சொல்கிறேன் அவர்களை அவர்கள் அல்லவா என்னைத் தேடி வருகிறார்கள்’

இந்தச் சமயத்தில், ‘திருடனுக்குக் காட்டும் கருணையை வேறு யாருக்காவது காட்டினால் என்ன, அப்பா?’ என்றாள் அருணா, குறுக்கிட்டு.