பக்கம்:காதல் நினைவுகள், பாரதிதாசன்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதிதாசன்

7


‘ஆடுமயில் என் உளத்தை
    ஆடரங்கம் ஆக்கிவிட
நாடிநலிந்தாள்’ எனச்சொல் கின்றாய்—அவள்
    மாடியிலே ஏன் ஒரு நாள் நின்றாள்?

அவளை மறந்துவிடு

றந்துபோ நெஞ்சே அந்த
     வஞ்சியை நினைக்க வேண்டாம்
‘இறந்துபோ‘ என்றே என்னை
     இவ்விடம் தனியே விட்டாள்!
பறந்துபோ இரவே என்றேன்
     எருமையா பறந்து போகும்?
உறங்கவே இல்லை கண்கள்
     ஒட்டாரம் என்ன சொல்வேன்?
மருந்துகேள்! அவளை நெஞ்சே
     ‘மறந்துபோ‘ துன்பம் இல்லை!
இருந்தொன்றை நினைப்பேன்; அந்த
     ஏந்திழை குறுக்கில் தோன்றி
அருந்தென்பாள் கனியுதட்டை
     அவள் அங்கே இருந்தால் தானே?
வரும்தென்றல்! தொடுவாள் என்னை,
     மலர்மேனி இருந்தால் தானே?

பாலோடு சீனி யிட்டுப்
    பருகுவேன் அங்குத் தோன்றி
மேலோடு வார்த்தை சொல்லி
    விரைவோடு மறைந்து போவாள்!
சேல்ஓடும் போது பின்னே
    சிச்சிலி விழிகள் ஓடல்
போலோடி ஏன் அவள்பால்
    பொருந்தினை? மறப்பாய் நெஞ்சே!
ஏட்டினில் கவிதை தன்னில்
    இவளைத்தான் காணு கின்றேன்.
கூட்டினிற் கிளியும் வானில்
    குளிரிளம் பிறையும் என்றன்