பக்கம்:காதல் நினைவுகள், பாரதிதாசன்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

காதல் நினைவுகள்


இன்று நடத்திடுவாய்—மணத்தை”
        என்று பகர்ந்தார்கள்.
”இன்று வரவேண்டும்—அதிலும்
        இப்பொழு” தென்றுரைத்தான்.

”நல்ல மணத்தைமுடி—தொகையும்
        நாளைக்கு வந்துவிடும்.
முல்லைச் சிரிப்புடையாள்—அழகு
        முத்தை மணந்து கொள்வாய்.
சொல்லை இகழாதே”—எனவே
        சொல்லியும் பார்த்தார்கள்.
”இல்லை, முடியாது—வரட்டும்”
        என்று மறுத்துவிட்டான்.

மங்கையைப் பெற்றவனும்—தனது
        வாயையும் நீட்டிவிட்டான்.
அங்கந்த மாப்பிள்ளையும்—வாலினை
        அவிழ்த்து விட்டுவிட்டான்.
பொங்கும் சினத்திலே—வந்தவர்
        போக நினைக்கையிலே
தங்கம் நிகர்த்தவளின்—அருமைத்
        தந்தை உரைத்திடுவான்.

”இந்த மணவரையில்—மகளுக்
        கிந்த நொடியினிலே,
எந்த வகையிலும்நான்—மணத்தை
        இயற்றி வைத்திடுவேன்.
வந்துவிட்டேன் நொடியில்”—எனவே
        வாசலை விட்டகன்றே
அந்தக் கணக்கனிடம் — நெருங்கி
       ”அன்பு மகளினை நீ

வந்து மணம்புரிவாய்” — என்றனன்
        மறுத்துரைப் பானோ?
தந்த நறுங்கனியைக் — கணக்கன்
        தள்ளி விடுவானோ?
முந்தை நறுந்தமிழைத் — தமிழன்
        மூச்சென்று கொள்ளானோ?