பக்கம்:காதல் மாயை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாசம் வென்றது டது. அதுவும் 'பிடாரித் திருவிழா' வைப் பற்றி அன்று ஒரு தினம் யாரோ பேசியதைக் கேட்டதிலிருந்து. அவளுக்குத் தன் புருஷன் மீதிருந்த ஆத்திரம் வளர்ந்ததே யொழியக் குறைந்தபாடில்லை. தன் தந்தையைக் காண ஊருக்குப் போக இயலாம். விருப்பதற்குத் தன் கணவனே காரணம் என்பதை அறிந்து கொண்ட பூங்காவனத்தால் அவனை வெறுக்காமல் இருக்கமுடியமா? ஆனால், அவன் பேதை உள்ளம் தன் கணவனது மன இயல்பைக் கொஞ்சமேனும் ஆராய்த் தறித்ததுண்டா? கல்யாணம், காட்சி என்று ஏற்பட்டு சுபவேளையில் பூங்காவனத்தை முத்துலிங்கம் கைப்பிடித்திருந்தால், - ஒருபோதும் அவள் தாய் வீடு செல்வதற்கு மறுத்துப்பேசி யிருக்கமாட்டான். அந்த இரண்டு வருஷத்திற்குள் ஒவ் வொரு தேவைக்கும் திருநாளுக்கும் குடும்ப சகிதமாக. மாமன் வீடு சென்று திரும்பி இருப்பான் முத்துலிங்கம். ஆனால், முத்துலிங்கம் அவளை அடைந்த விதம் வேறு. அப்படியிருக்கையில் தன் மாமன் கண்களில் எப்படி விழிப் பதற்கு மனம் வரும்? இந்த ஒரே ஏக்கம் தான் அவன் மனத்தை வேதனையிலாழ்த்தி வந்தது. பிடரித் திருவிழா என்றால் பூவைமாநகரில் வெகு பிர சித்தம். பொங்கல் புது நாளில் புது உடை தரித்து நிற் கும் ஜனங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட முடியாது. தேர், திருவிழா ஒருபுறமிருக்க, 'கரகம்' விளையாடும் பகுதி 24 .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/30&oldid=1087854" இலிருந்து மீள்விக்கப்பட்டது