பக்கம்:காதல் மாயை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசம் வென்றது மிகவும் வேடிக்கையாயிருக்கும். அதைப்பார்க்கவேண்டியே பொழுது சாயும்வரை கூட்டம் கலேயாதிருக்கும். அதிலும் முத்துலிங்கம் கரகம் எடுத்து ஆடுகிருனென்ருல் கூட்டத் துக்குக் கேட்க வேண்டியதில்லை. இளம் வயது; இடையில் மஞ்சள் வேஷ்டி, உடல்முழுவ தும் பூமாலேகள்; நெற்றியில் பட்டை பட்டையாக விபூதி, தலைக் கொண்டையில் பூக் கும்பல். அலங்காரம் பண்ணப் பட்ட குடத்தை எடுத்துத் தலையில் வைத்துக்கொண்டு கையில் பிரம்புடன் ஒயிலாட்டம் ஆட எத்தனித்தான் முத்துலிங்கம். அந்தச் சமயம் தன்னே இமைகொட்டாமல் கவனித்து ரசித்து கிற்கும் ஒரு ஜீவனேயும் பார்த்துவிட்டான். அது தான் பூங்காவனம். ஏற்கெனவே அவள்மீது முத்துலிங்கத் துக்கு ஒரு கண் உண்டென்பது என்னவோ வாஸ்தவம் தான். அந்த ஊருக்கு என்ருவது வரும்போது, சொல்லி வைத்தாற்போல பூங்காவனம் அவன் கண்களில் தட்டுப் பட்டுக் கொண்டு.தானிருப்பாள். ஒரிரண்டு தடவை நேரு க்கு நேர் பேசியதும் உண்டு. மேலும் பூங்காவனம்தான் அந்தச் சுற்று வட்டாசத்துக்கு அழகியும்கூட. செளந்தர்ய தேவதையின் பூரண கடாட்சம் கன்னிப் பருவமடைந்த அவள் கோமள மேனியில் பரிபாலித்திருக்கையில் அழ கிற்கு என்ன குறை : முத்துலிங்கத்துக்கு மகிழ்ச்சி பிறக்கவே அவன் ஆட் உம் அன்று பிரமாதமாக அமைந்துவிட்டது. முகத்தில் வெற்றிப் புன்னகை தோன்ற ஒருமுறை கூட்டத்திலிருந்த பூங்காவனத்தைக் கவனித்தான். . . 25 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/31&oldid=789082" இலிருந்து மீள்விக்கப்பட்டது