பக்கம்:காதல் மாயை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசம் வென்றது முத்துலிங்கம் இவ்விதம் சொல்லி கடையைக் கட்டிவிட் டான். திருவிழாவிற்குப் போனுல் தன்னேத் தன்மாமன் எங்கே அடையாளம் தெரிந்துகொள்ளப் போகிருன் என்ற தைரியத்தில்தான் அவ்வளவு சுதாரிப்பாகக் கிளம்பி விட்டான் அவன். கிளம்பும் சமயம் இருந்த தைரியம், சந்தோஷம் அனேத்தும் ஊர் நெருங்க கெருங்க மறையத் தொடங்கின. * ஐயோ, புள்ளேயோடே அவளேயும் கூட்டிக்கிட்டு வந்த கிழவன் தலையையா சீவிப்பிடுவாரு என்ன அசட்டுத்தனம்' என்று ஒவ்வொருமுறை குறைபட்டுக் கொண்டான் முத்துலிங்கம். சுற்றிலும் நோக்கினன். அதே கரகம் விளையாடின இடம்: அண்ண்ே, அந்த விசிறியைக் கொஞ்சம் கொடுவேன். பூசாரி மயக்கம் போட்டு விழுந்திட்டாரு!” இதைக் கேட்டதும் திடுக்கிட்டு விரைந்தோடினுன் முத்துலிங்கம், ஒரே கும்பல். - உற்றுப்பார்த்தான் முத்துலிங்கம். தரையில் பூங்காவ னத்தின் தகப்பன் மூர்ச்சையுற்று வீழ்ந்து கிடந்தான். அவசரமாக ஓடித் தண்ணிர் கொண்டுவந்து கிழவன் முகத்தில் தெளித்து விசிறின்ை. . சற்று நேரம் கழித்து, கிழவன் மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்தான். முத்துலிங்கத்துக்கு வெட வெடத் தது. ஒருவேளை கிழவன் தன்னே அடையாளம் கண்டுவிட் டால் என்ன செய்வது என்று பயந்துபோனன். 'தம்பி, உனக்கு செர்ம்பவும் புண்ணியம் கிடைக்கும். மாரியாத்தா ஒனக்கு ஆயுசைப் பெலமா எழுதிப் போட 28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/34&oldid=789088" இலிருந்து மீள்விக்கப்பட்டது