பக்கம்:காதல் மாயை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீறுபூத்த நெருப்பு டும் வளர்பிறைபோல விரித்துப் பின்னியிருந்த கூந்த லுக் கிடையில் ஜூபேதாவின் எழில்நிறை வதனம் காட்சி யளித்தது. - கப்பல் புறப்படுவதற்கு அறிகுறியாக மணியடித்தது. 'ஜுபேதா, நான் போய் வருகிறேன். உன் அம்மா விடம் சொல்” என்று கூறி அவளது நடுங்கும் நளினக் கரங்களில் தன் கினேவின் சின்னமாக அன்பு முத்திரை விட்டான் குமார்; அவன் கண்களில் நீர்ப்படலம் விரிந்தது. 2 ரங்கூனில்தான் ஜூபேதா-குமார் நட்பு, சந்திப்பு கிகழ்ந்தது. ஒன்றுபட்ட இரு உள்ளங்கள் ஒட்ட ஆரம்பித் தன. நட்பு பின் காதலாக மாற, அப்புறம் காதல் செடி பண்பட்டது. இதயம் ஊடுறுவும் கனிவுப் பார்வைகள்: மனமுவந்த பேச்சு வார்த்தைகள்-இப்படிப் பல சந்தர்ப் பங்கள் நிகழ்ந்தன; முடிந்தன. பிறகு மீண்டும் துவங்கின. பின் கேட்பானேன் ? . - அன்று மலாய் வாசிகளின் முக்கிய பண்டிகையான 'அஜ்ஜி திருநாள் ! - - - குமார் அன்றும் அந்த அறைக்குச் சென்ருன். அவன் ஆடைஅலங்காரம் அற்புதமாகயிருந்தது. அறை யினுள் அடியெடுத்து வைத்த குமாரைக் கண்டதும், 'நமஸ்தே சொல்லி உட்காரவேண்டும்" என்று உபசரிக் தாள் ஜுபேதா. மார்புடன் ஒட்டி இழைந்தோடியிருந்த மேலங்கியின் இருபுறங்களிலும் கூந்தலின் இரண்டு பின் னல்களும் பிரிந்திருந்தன. தனிப்பட்ட காந்த இழைவு. அவள் தாமரை முகத்தில் மின்னியது. குறுநகை எப்போ 33

  1. , .
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/39&oldid=789098" இலிருந்து மீள்விக்கப்பட்டது