பக்கம்:காதல் மாயை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசைக்கனல் -ணிக்கொள்ள முடியாதென்று கண்டிப்பாகத் தகப்படனிம் சொல்லிவிட்டாள். 'என்ன, முடியாதாங்காட்டி' என்ருன் வேலப்பன். ஆமா காலிப் பயலின் னு ஊரெல்லாம் பேசுது. அந்த மனுசனேக் கட்டிக்கிட என்னலே முடியாது” என் ருள் தெய்வானே அழுத்தந் திருத்தமாக, ஏலே, யாரு காலி என் அக்கா மவணு காலி ராஜா வாட்டமாயிருக்கிருன்! அவனேக் கண்ணுலம் பண்ணிக்க அதிருஷ்டம் வேணுமா? அதிர்ஷ்டமாவது, மண்ணுவது? ஊம்; கவுண்டன் திட்டம் போட்டா போட்டதுதான். செல்லி, உன் மகள்கிட்டே சொல்லிப்போடு. வார கெள மைக்குப்பரிசம் போடணும். மாப்பிள்ளே அதே காலிப்பயல் தான்.தெய்வானைக்குச் சொல்லு, ஆமா அப்புறம் பெத்த மகளாச்சேன்னுகூடப் பார்க்கமாட்டேன். அது தலையைக் கொடுவாளுக்குப் பலி கொடுத்திடுவேன்’ என்று கர்ஜித் தான் வேலப்பக் கவுண்டன். பக்கத்தில் கின்ற அவன் மனேவியின் மூளே கலங்கியது. தகப்பனின் இறுதி மொழிகளே, திட்டவட்டிமான தீர்ப்பை கினேத்துப் பார்த்த தெய்வானே ஐயோ என்று அலறிள்ை. - உள்ளக் கடலில் ஆர்ப்பரித்த கினேவு அலைகள் ஒய்ந்த வுடன், சுய கினேவு வரப்பெற்ருள் தெய்வானே; நீர் நிறைந்த கண்களேத் துடைத்துக்கொண்டு எழுந்தாள். அதேசமயம் ஆற்று வெள்ளத்தைப் பிளந்துகொண்டு "ஐயோ என்ற சத்தம் வெடித்துக் கிளம்பி அவள் காது களில் எதிரொலித்தது. 56

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/62&oldid=789151" இலிருந்து மீள்விக்கப்பட்டது