பக்கம்:காதல் மாயை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு ன்னுரை என்னுடைய பழைய நண்பர் ஒருவர் சிறந்தவிமரிசகர் ஒரு பத்திரிகை விடாமல் வாங்கி ஒரு எழுத்து விடாமல் படிப்பவர். காலேந்து வருடங்களுக்கு முன்பு டெல்லிக்கு உத்தியோகத்தை மாற்றிக் கொண்டு போனவர். அந்த ஊச் சீதோஷ்ண கிலேபிடிக்காததால் பழையபடி பம் பாய்க்கே சமீபத்தில் வந்துவிட்டார். அவரைப் பார்க்க ஒரு நாள் போயிருந்தேன். rேமலாபங்களே விசாரித்த பிறகு இலக்கிய விசாரத்தில் இறங்கினேன். 'கான் இப்பொழுது தமிழ்ப் பத்திரிகைகள் - முக்கிய மாக கதைப் பத்திரிகைகளேப் படிப்பதை அடியோடு விட்டு விட்டேன், ஸார்' என்று ஒரு குண்டைத் துரக்கிப் போட்டார் அவர். "என்ன லார் அப்படி” கண்பர் கூறியதை நான் அப்படியே ஒப்புக்கொள்ள வில்லே. இருந்தாலும் அவரிடம் முழுவதும் மறுத்துச் சொல்லவும் முடியவில்லை. ஏனென்ருல் சமீப காலத்தில் தமிழ்நாட்டுப் பத்திரிகைகளில் (பிறமொழிப் பத்திரிகை களேப் பற்றிய கவலை நமக்கு வேண்டாம்) வெளி வரும் பெரும்பாலான கதைகள், குறிப்பாகச் சிறு கதைகள் பத்து வருஷங்களுக்கு முந்தியவற்றை விடித் தரத்தில் மட்டமாகவே இருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம், அன்றையைவிட இன்று அதிகமான பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதன் அளவுக்கு 1.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/7&oldid=789166" இலிருந்து மீள்விக்கப்பட்டது