இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
42 கண்ணாளும் புலோமசையும் மங்கலநாண் தாங்கவருள் காட்டும் நின்னைப் பண்ணாளும் பாடியுரு கிடவருள்தி காந்தமலைப் பரம வாழ்வே. 160. விரவுமலை யாழியில்வேல் விட்டவனே இந்திரற்கு வீறு வாழ்வும் புரவுமலை யாதுறவே வழங்குவள்ளற் பெருமானே பூத லத்தோர் பரவுமலை யாங்காத்த கிரிக்கடவுள் நினையெண்ணாப் பாவி நெஞ்சக் கரவுமலை வுறுமியல்பும் போக்குதியா லினியேனும் காதல் கூர்ந்தே. 161. கற்கண்டு மதுரசம்பால் என அன்பர்க் கினியையெனக் கழறல் கேட்டேன் நிற்கண்டு சுகம்பெறுவார்க் கெந்நாளும் பேரின்பம் நிலைக்கு மென்பார் எற்கண்டு மனம்பகையா இருத்தலினால் நினையறியும் எழுச்சி யில்லேன் மற்கண்டு ளங்குதிருத் தோளுடையாய் காந்தமலை வளருங் கோவே, நலம்பயிலு மோங்காரத் துள்ளொளியா யாதார நன்பொன் வாயிற் குலம்பயிலு மாறினுக்கு மீதானத் துயர்பிரம கோஷ மாகி 162.