பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109

வைணவ சமயத்தில் அளவற்ற பற்றும் பெருமதிப்பும் கொண்டிருந்தார். வைதீகக் கொள்கைகளில் உடும்புப் பிடியாக இருந்தார். தம் குல ஆசாரத்திலிருந்து இம்மியள வும் தவறுவதற்கு அவர் ஒருப்படார். இத்தகைய ஒரு பெண், சாதி சமயம், உயர்வு, தாழ்வு ஆகிய எண்ணங்களே கடந்து பரங்த நோக்கோடு வாழும் மகாத்மாவோடு வாழ்க்கை கடத்துவதென்பது அவ்வளவு எளிதில் கடக்கக் கூடிய செயலா? கஸ்தூரிபாய் படித்தவருமல்ல; படித் திருந்தால் ஓரளவு உலகின் நடைபேற்றை அறிந்திருக்க இயலும், அவர் உலகை அறிந்து கொண்டதெல்லாம், காந்தி என்னும் கண்ணுடியின் மூலம்தான்.

பொதுவாகவே இங்திய நாட்டிலிருக்கும் குடும்பத் தலைவிகளுக்குப் பரம்பரையாக ஒரு பண்பு உண்டு. கண வனேவிடத் தாம் அறிவாளி என்ற எண்ணம் ஒவ்வொரு பெண்ணும் தன் கணவனைக் குடும்பப் பொறுப்பில்லாதவன். என்று எண்ணுவது வழக்கம். வெளியுலகில் சிறந்த அறிஞனுகவும், கலைஞனாகவும், பெரியோனகவும் கணவன் மதிக்கப் பெறுவான். ஆனல் வீட்டுலகிலோ, “என்ன மனிதர்! குடும்பத்தில் சிறிதும் அக்கறையின்றிப் பொது நலம் பொதுநலம் என்று பொறுப்பற்றுத் திரிகிருரே!” என்று மனைவி வருங்துவாள். இந்த விதிக்குக் கஸ்தூரி பாய் புறம்பானவரல்லர், க | ங் தி ய டி. க ளி ன் அருமை பெருமைகளை அவரும் தொடக்கத்தில் அறிந்து கொள்ளா மலே வாழ்ந்தார். அவருடைய உயர்ந்த குறிக்கோள் களுக்கு அவர் தடைக்கல்லாகவும் இருந்தார். அதுபோன்ற சமயங்களில் அடிகளின் குடும்பத்திலும் புயல் வீசும்.

காங்தியடிகள் டர்பன் நகரில் வழக்கறிஞராக இருந்த சமயம். அவர் அலுவலகத்தில் பல எழுத்தாளர்கள் (Clerks) பணியாற்றினர். அவர்களில் தமிழர்களும், குசராத்திகளும், கிருத்தவர்களும் இருந்தனர். தம்மிடத்தில்