பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 I

“ஒரு புனித நினைவு என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார், அவர் வாயாலேயே கேட்போம்:

“என் மனைவியிடம் நான் வைத்திருந்த அன்பு மிகக் கொடுமையான வகையைச் சார்ந்தது. என்னே அவளுடைய ஆசிரியனுகக் கருதியிருந்தேன். எனவே அவளிடம் எனக் கிருந்த குருட்டுத்தனமான அன்பின் காரணமாக அவளேப் பெரிதும் தொல்லப்படுத்தி வந்தேன்.

அவள் பாண்டத்தைத் தூக்கிச் சென்றதாலேயே நான் மனநிறைவு கொள்ளவில்லை. அதை அவள் மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டுமென்று விரும்பினேன். எனவே உரத்த குரலெடுத்து, என்னுடைய வீட்டில் இம்மாதிரி மூடத் தனத்தைப் பொறுக்க முடியாது’ என்றேன். அம்மொழி கள் கூரிய அம்புகளைப் போல் அவளுடைய உள்ளத்தில் தைத் தன.

‘உங்கள் வீட்டை நீங்களே வைத்துக்கொண்டு என்னைத் தொலைத்து விடுங்கள்’ என்று அவள் கூச்சலிட் டாள். அப்பொழுது என்னே கான் மறந்தேன். என் இதயத்தில் இரக்க ஊற்று வற்றிப் போயிற்று. அவ ளுடைய கையைப் பிடித்து, ஏணிக்கு எதிரே இருந்த வாயிற்படிக்கு இழுத்துக் கொண்டு போனேன். வெளியே தள்ளுவதற்காகக் கதவைத் திறந்தேன்.

அவள் கன்னங்களின் வழியாய்க் கண்ணிர் தாரை தாரையாய் வழிந்து கொண்டிருந்தது. அவள், உங்களுக்கு வெட்கமில்லையா? உங்களுக்கு இப்படிச் சுய உணர்வு அற்றுப் போய்விட வேண்டுமா? எனக்கு போக்கிடமெங்கே? தஞ்சமளிப்பதற்கு இங்கு என் பெற்றேர்களாவது, உறவினர்களாவது இருக்கிறார்களா? நீங்கள் எண்னே உதைத்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான். ஆண்டவன் மீது ஆணே! கதவைச் சாத்துங்கள். யாராவது சிரிக்கப் போகிறார்கள்!’ என்றாள்.