பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127

மட்டும் ஓயவில்லை; போராடிக்கொண்டே இருந்தது. அப் போராட்டம் வெளியில் தெரியாமல் அசைவற்று கடந்து கொண்டிருந்தது. சில மணிநேரம் படுக்கையில் கிடங்த வண்ணம் சிந்தனைப் போராட்டத்தில் ஈடுபட்டார். இரவு இரண்டு மணிக்குப் படுக்கையை விட்டு எழுங்து அமர்க் தார். முகத்தில் தெளிவு ஏற்பட்டது. ஏதோ ஒரு முடிவுக்கு வங்து விட்டவர் போல் தென்பட்டார். காலைத் தொழுகை முடிந்தது. ஆசிரமவாசிகளையெல்லாம் அழைத்தார்.

முதல் நாள் மாலை கடந்த நிகழ்ச்சியை எல்லோருடைய முன்னிலையிலும் எடுத்துக் கூறினர்; பார்ச்சூர் சாஸ்திரியை ஆசிரமத்தில் சேர்த்துக் கொள்வதா, வேண்டாமா என்ற பிரச்சனையை அவர்கள் முன்னிலையில், ஆராய்ந்தார். ஆண்டவன் பார்ச்சூர் சாஸ்திரியின் வடிவத்தில் தம்மைச் சோதனை செய்ய வந்திருப்பதாகக் கூறினர். ‘பார்ச்சூர் சாஸ்திரியை அவருடைய தொழுகோயின் காரணமாக நான் வெளியில் அனுப்பினல், நான் ஆண்டவன் விருப்பத்திற்கு மாறுபட கடப்பவன் ஆகிறேன். ஆல்ை அதே சமயத்தில் ஆண்டவனல் எ ன் னி ட ம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் உங்கள் எல்லோருடைய கலத்தையும் பாதுகாப்பது என் கடமையாகிறது. இருதலைக் கொள்ளி எறும்புபோல் என் கிலே உள்ளது. இத் துன்பமான சோதனையை இவ்வாசிர மத்திலுள்ள எல்லோரும் ஒப்பி ஏற்றுக்கொண்டால் ஒழிய, நான் எவ்வாறு சாஸ்திரியை இங்கு தங்க வைக்க முடியும்?” என்று கூறினர். -

ஆசிரமவாசிகள் எல்லோரும் இக்கடின சோதனையில் பங்குகொள்ள ஒருமுகமாக ஒருப்பட்டனர். அடிகளின் உள்ளத்தில் ஏற்பட்டிருந்த பழு நீங்கியது. ஆனல் அவருடைய சத்தியத்திற்கும், அஹிம்சைக்கும் மீண்டுமோர் கொடிய சோதனை. திண்டாமை கொடிது என்கிருேம். ஆல்ை தீண்டாதோரும் தீண்டுவதற்கு அஞ்சும் தொழு