பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ 3

காரணம், பள்ளிக்கூடத்துக்கு அருகில், தெரு மூலையில் கின்று கொண்டு கிருத்தவப் பாதிரிமார்கள் செய்த சொற். பொழிவுகள்தாம். இந்து சமயத்தையும், அச்சமயக் கடவுளர்களையும் அப்பாதிரிமார் இகழ்ந்து பேசியதைக் காங்தியடிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதே சமயத்தில் ஒர் இந்து நண்பர், கிருத்துவ சமயத்தைத் தழுவியது பற்றிக் காந்தியடிகள் கேள்விப்பட்டார். அந்த நண்பர் கிருத்தவரானவுடனே மாட்டிரைச்சி தின்னவும், சாராயம் குடிக்கவும், மேலேகாட்டினரைப்போல் உடைகளை யணியவும் தொடங்கிவிட்டாராம்; அதோடு இந்து சமயத் தையும், இங்திய காட்டையும் இகழ்ந்து பேசத் தலைப் பட்டாராம். இவற்றையெல்லாம் அறிந்ததும், கிருத்தவ சமயமும் ஒரு சமயமா? இதற்குச் சமயம் என்ற பெயரே தகாது’ என்று அடிகள் எண்ணினராம். ஆனல் பிற்காலத் தில் மேற்படி காரியங்கட்கெல்லாம் கிருத்தவ சமயம் பொறுப்பில்லை என்றும், கிருத்தவ சமயச் சொற்பொழி வாளர்களே காரணம் என்றும், காங்தியடிகள் அறிந்து கொண்டார். கிருத்தவ சமயம் அடிகளின் வாழ்வில் எவ் வாறு தொடர்பு கொண்டிருந்தது என்பதைப் பற்றிப் பின்னர் அறிவோம்.

காந்தியடிகள் இங்கிலாந்தில் படித்துக் கொண்டிருந்த போது, பிரம்மஞான சங்கத்தைச் சேர்ந்த இரு ஆங்கில கண்பர்கள், அவருக்கு அறிமுகமானர்கள். அப்போது பகவத்கீதையைப்பற்றிய பேச்செழுங்தது. ர்ே பகவத் கீதை படித்திருக்கிறீரா? என்று அந்த கண்பர்கள் கேட் டார்கள். ஆனல் பகவத்கீதையோடு அடிகளுக்கு ஈடுபாடு கிடையாது. எனவே, அடிகளையும் தம்முடன் கீதை படிக்க வருமாறு அழைத்தார்கள். வெளிநாட்டுமக்கள், தம் தாய் காட்டு நூலான கீதையைப் படிக்க அழைத்தபோது, அடி கள் உண்மையாகவே வெட்கமடைந்தார். பிறகு, சர்எட்வின் ஆர்னல்டு’ என்பவரால் எழுதப்பட்ட கீதை