பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 4 3

உலகில் எல்லோர் முன்பும் பணிவு காட்டி, எவரையும் இகழாது இன்சொல் பேசி, உள்ளம் வாய் மெய் ஆகிய மூன்றிலுைம் கவலேயற்றிருப்பவனே வைணவன்.

எவ்வுயிரும் தன்னுயிர்போல் எண்ணி, பற்றை ஒழித்துப் பிறபெண்டிரைத் தாயென மதித்து, உள்ளத் தாற் பொய்யிலளுகிப் பிறன் பொருளே வெஃகாதவனப் வாழ்பவன் வைணவன்.

மாயையால் அசையாது உறுதிப்பாடுகொண்டு, இராம காமத்தில் ஈடுபாடு மிக்கவய்ை வாழ்பவன் வைணவன்.

பொய்யுரை, கயமை ஆகியவற்றினின்றும் விலகிப் பற்று, இன் பவிருப்பம், சினம் முதலியவற்றை அடக்கி ஆள்பவனே வைணவன்.

இத்தகைய வைணவனைப் பெற்ற தாயை நூறு முறை வணங்குவேன். அவனுடைய உடலில் எல்லாப் புண்ணியத் தலங்களும் அடக்கம். அவனே ஒருமுறை காண நேர்க்தால், கமது எழுபத்தொரு தலைமுறையும் கடைத்தேறும்.”

மேற்கூறிய பாடலை எடுத்துக் கூறி, இம்மாதிரியான வைணவனுவதற்கு கான் முயன்று கொண்டிருக்கிறேன்” என்று கூறுவார். அடிகள் கடைப்பிடித்தொழுகிய சமயத் திற்கு உயிரூட்டிய மற்றாெரு குசராத்திப் பாடல் குறிப் பிடத் தக்கது. அப்பாடல் பின்வருமாறு :

“ஒரு குவளை தண்ணிர் கொடுத்தவனுக்கு ஒருவேளை விருந்தளிக்க வேண்டும்.

அன்புடன் உன்னே வரவேற்பவனே ஆர்வத்தோடு வணங்க வேண்டும்.

உனக்கு ஒரு காசு கொடுத்தவனுக்கு ஒரு பொன் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

உன் உயிரைக் காத்து உதவிய அன்பனுக்குத் திரும்ப உன் உயிரை அளிக்க எப்போதும் ஆயத்தமாக இருக்க வேண்டும்.