பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

“எனக்கு ஒன்றும் நேராது; கவலைப்படாதீர்கள்!” என்று அன்னையார் அடிகளுக்கு ஆறுதல் சொன்ஞர். போனிக்ஸ் ஆசிரமத்தை அடைந்த பின்னர் தம்முடைய சொங்த மருத்துவ முறையினலேயே அன்னேயாரைக் குணப்படுத்திவிட்டார் அடிகள்.

8. நோயும் மருந்தும்

“விஞ்ஞானிகள் புராணிகர்களைவிட மோசமானவர் கள்’ என்று பெர்ளுர்டுஷா ஒருமுறை குறிப்பிட்டார். அது உண்மைதான். ஒரு புராணிகன் பூமியை ஆதிசேடன் ஆயிரம் தலைகளால், தாங்கிக்கொண்டிருக்கிருன் என்று கூறும்போதும், இரணியாட்சன் பூமியைப் பாயாகச் சுருட் டிக் கடலில் ஒளியவைத்தான் என்று கூறும்போதும், ‘இது என்ன விந்தையாக இருக்கிறது ஆதிசேடளுவது பூமியைத் தாங்குவதாவது? அவன் எங்கே கின்று கொண்டு தாங்குகிருன் உருண்டையான பூமியைப் பாயாகச் சுருட்டமுடியுமா? அப்படிச் சுருட்டிலுைம் கடலில் எப்படி ஒளிய வைக்கமுடியும் கடல் பூமிக்கு வெளியிலா இருக் கிறது ? இது என்ன மூடநம்பிக்கை பகுத்தறிவுக்குப் பொருந்தவில்லையே’ என்று கையாடுகிருேம். ஆனல் விஞ்ஞானி, “வானத்தில் ஒரியன் என்னும் விண்மீன் இருக் கிறது. அதிலிருந்து ஒரு ஒளிக்கற்றை புறப்பட்டுப் பூமியை அடைவதற்குப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகின் றன” என்று சொன்னல் அக்கருத்தை ஏனென்று கேட் காமல் ஒப்புக்கொள்கிருேம். அதன் உண்மையை ஆராய யாரும் விரும்புவதில்லை. விஞ்ஞானியின் வாக்கு வேத வாக்கு!

சரி 1 விஞ்ஞானி கண்டுபிடித்த ஒவ்வொன்றும் உண்மையாகி விடுகின்றதா? ஆர்க்கமிடிஸ், அரிஸ்டாட்டில் போன்ற கிரேக்க விஞ்ஞானிகள் காலத்தில் சரியானவை