பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. I

சுதேசி இயக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் ஆலத் துணிகளின் விலைகளைக் கண்டபடி உயர்த்திக் கொள்ளே லாபம் சம்பாதிக்கத் தொடங்கினர். இதை உணர்ந்த காங்தியடிகள், ஏழைகளின் செல்வம் வீணுகப் பறிபோவதை எண்ணிக் கதர்த் திட்டத்தைத் துவக்கினர். காந்தியடிகள் கதர் பிரசாரம் செய்வதற்காக ஒரு முறை தமிழ்நாடு வந்தார். மதுரையில் தங்கியிருந்தபோது, பலரும் அவரைக் காண வந்திருந்தனர். வங்தவர்களில் ஒரு கண்பர் வெளிநாட்டுத் துணியை அணிந்திருந்தார். கண்ப ரின் செயல் காங்தியடிகளின் உள்ளத்தை உறுத்தியது. தாம் மேற்கொண்ட கதர்ப் பிரசாரம் எதிர்பார்த்த அளவு பயன் விளேக்கவில்லை என்பதை உணர்ந்தார். அங்கண்ப ரைப் பார்த்து, ர்ே என்னைப் பார்க்க வந்து என்ன பயன்? கதர் உடுக்காமல் வங்திருக்கிறீரே! என்று அடிகள் வினவி ஞர். ஆனல் அங்கண்பரோ, கதர் கிடைக்கவில்லை என்று கூறினர். இவ்விடை அடிகளின் உள்ளத்தைச் சிந்தனையில் சாய்த்தது. கதரின் பற்றாக்குறையைப்போக்கத் தம்முடைய ஆடையை இன்னும் குறைத்துக் கொள்ள விரும்பினர்.

தமிழகச் சிற்றுார்களின் வழிச் சென்றபோது, அங் குள்ள வயற்புறங்களில் வேலை செய்வோர் கோவணம் மட் டுமே அணிந்திருப்பதை அடிகள் கண்டார். இக்காட்சி அவ ருக்கு வியப்பாக இருந்தது. வடகாட்டில் உழவர்களும் கூடச் சட்டை அணிவது வழக்கம். தம் அருகில் இருந்த தமிழ் கண்பர்களே இதுபற்றிக் கேட்டார். “அக் கோவ ணத்தைத் தவிர வேறு ஆடை வாங்குவதற்கு அவர்களிடம் பணம் எது?” என்று அந்த கண்பர்கள் கூறினர்கள் சொங்தகாட்டுச் சோதரர்கள் மானங்காக்கப் போதிய துணி யின்றி வாடத் தாம் மட்டும் வேட்டியும் சட்டையும் அணி வது அவருக்குப் பெரும் பாவமாகப் பட்டது. மனச்சாட்சி அவருள்ளத்தை வாள் கொண்டு அறுத்தது. அன்றி லிருந்து அவர் ஒரு முடிவுக்கு வங்தார். “இனி இடையில்