பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 98

செய்யப்படவில்லை. எ ங் கு ப் பார்த்தாலும் குப்பை கூளங்கள்! கண்ட இடத்தில் எச்சில் துப்பப்பட்டிருந்தது. கழிப்பறைகள் மிகவும் குறைவு! தி காற்றம் மிகுதியாக இருந்தது கழிப்பறைகளை நன்கு சுத்தம் செய்யவில்லை. காங்கிரஸ் விடுதியில் ஊழியம் செய்வதற்கென்று அமர்த் தப்பட்ட தொண்டர்களுக்கோ தொண்டு என்றால் என்ன வென்று தெரியாது. ஒரு தொண்டரிடம் ஏதேனும் சொன்னல், அவர் அடுத்த தொண்டரிடம் சொல்வார். அவர் மூன்றாமவரிடம் சொல்வார். இறுதியில் ஒரு வேலையும் கடைபெருது. போதாததற்குத் தொண்டர்கள் தங்களுக் குள் அடிக்கடி சச்சரவிட்டுக் கொள்வார்கள். மாநாட்டுக்கு வந்திருந்த பிரதிநிதிகள் யாது செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தனர்.

தமிழ் காட்டிலிருந்து வந்திருந்த தொண்டர்களோ, தங்களுக்கென்று தனிச் சமையலறைகளே அமைத்துக் கொண்டு, காற்புறமும் அதைத் தட்டியினல் மூடியிருங் தனர். தாங்கள் உண்பதைப் பிறர் பார்த்துவிட்டால் திட்டு என்று அவ்வாசாரக்காரச் சனதணிகள் கினைத்தனர். அவ்வறைக்குள் செல்வோர் மூச்சுவிட முடியாமல் திக்கு முக்காட வேண்டியதுதான். அவர்களின் அறியாமையைக் கண்டு அடிகள் வருங்தினர்.

காங்கிரஸ் விடுதிகளேத் தூய்மைப்படுத்துவது சம்பந்த மாக அடிகள் தொண்டர்களோடு பேசிப் பார்த்தார். அவர்கள் வழிக்கு வருவதாகக் காணுேம், “இங்தக் குப்பை களே எல்லாம் அப்புறப்படுத்த வேண்டாமா ?’ என்று கேட்டார்.

“அதெல்லாம் தோட்டியின் வேலை’ என்று தொண் டர்கள் கண்ணை மூடிக்கொண்டு பதில் சொன்னர்கள். பிறகு ஒரு விளக்குமாறு கொடுக்கும்படி கேட்டார். தொண்டர்கள் அவ் வுதவியும் செய்யவில்லை. காந்தியடிகள் எப்படியோ ஒரு விளக்குமாற்றைத் தேடிப் பிடித்தார்.