பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

பிடிக்கவில்லை. அவர்களுடைய வருங்கால வாழ்வை கான் கெடுத்து வருவதாக கினைத்தார். முழு அன்புடன் தமது முழு வலிமையையும் காட்டி அவர் என்னுடன் வாதிடுவார். ஆங்கிலம் உலகம் முழுவதும் பரவியுள்ள மொழியென்றும், இளமையில் அதைக் கற்றுக்கொள்வோர் வாழ்க்கைப் போராட்டத்தில் மற்றவர்களைவிடப் பெரிய நன்மை பெற்ற வர்களாவார்கள் என்றும் அவர் கூறினர். என்றாலும், என் உறுதியை அவரால் மாற்ற முடியவில்லை. என் ணுடைய கொள்கைதான் சரியான தென்று அவர் ஒப்புக் கொண்டாரா அல்லது நான் சுத்தப் பிடிவாதக்காரன் என்று விட்டுவிட்டாரா என்பது இப்போது கினேவில்லை. இது இருபது ஆண்டுகட்கு முன் கடந்த நிகழ்ச்சி. அதற்குப் பின் எனக்கு ஏற்பட்ட பட்டறிவினுல், இக் கொள்கையில் என் உறுதி வலிமை பெற்றிருக்கிறது. இலக்கியக் கல்வி பூரணமாய்ப் பெருத குறைபாடு எண் மக்களிடம் இருப் பினும், தாய்மொழியில் அவர்கள் பெற்ற பயிற்சி, அவர் களுக்கும் காட்டுக்கும் பெரும் கன்மையளித்து வருகிறது.”

முப்பது ஆண்டுகளுக்கு முன் காங்தியடிகள் இவ்வாறு எழுதினர். காந்தியடிகளின் மக்கள் காட்டுக்கு அருங் தொண்டுகள் புரிந்து வந்தார்கள். மணிலால் தென்னுப் பிரிக்க மக்களின் கலனுக்காக அந்தியன் ஒபிணியன்’ என்ற செய்தித்தாள் நடத்தி வங்தார். தேவதாஸ் இந்தியாவில் சிறந்த ஒரு ஆங்கிலச் செய்தித்தாளின் ஆசிரியராகப் பணி யாற்றிவந்தார். காந்தியடிகள், ஆசிரமம் துவங்கியவுடன் “ஆதாரக் கல்வி முறையைக் கண்டறிந்து காட்டிற்கு வழங் கினர். தொழில் மூலமாகவே எல்லாக் கல்வியையும் கற்க லாம் என்பது அவரது கொள்கை, பள்ளியில் பயிலும் கல்வியானது காட்டுப்பற்றை எட்டக்கூடியதாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். தேசியக் கல்வியை கிர்மானத் திட்டங்களில் ஒன்றாக்கி காடெங்கும் பரப்பினர்.